21 மாதம் சிறை தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்: தப்பித்தார் மெஸ்ஸி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வரி ஏய்ப்பு வழக்கில் பார்சிலோன நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மெஸ்ஸி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2007 முதல் 2009–ம் ஆண்டு இடையிலான காலக்கட்டத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2106ம் ஆண்டு மெஸ்சி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ்க்கு 21 மாத சிறை தண்டனை வழங்கிய பார்சிலோனா நீதிமன்றம், மெஸ்ஸிக்கு 2 மில்லியன் யூரோ, அவரது தந்தைக்கு 1.5 மில்லியன் யூரோ அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக மெஸ்ஸி தெரிவித்திருந்தார்.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸியின் மேல் முறையீடு மனுவை விசாரித்த ஸ்பெயின் உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து பார்சிலோனா நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

அதேசமயம், மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ்க்கு 15 மாதமாக சிறை தண்டனையை குறைத்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஸ்பெயின் சட்டத்தின் கீழ், இதற்கு முன் குற்றவியல் பதிவு இல்லாதவர்கள், இரண்டு வருடங்களுக்குள் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை குற்றத்திற்கான நன்னடத்தைச் சோதனையின் கீழ் தவிர்க்கலாம்.

இதன் மூலம் பார்சிலோன மற்றும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் சிறை தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*