பேசுனபடி பணத்த கொடுக்குறீங்களா? இல்ல ஆட்சிய கலைக்கட்டுமா? மதில்மேல் பூனையான பழனிச்சாமி அரசு!!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பழனிச்சாமி அரசுக்கு ஆபத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிமுக அம்மா அணியில் 122 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அவர்களில் சில எம்.எல்.ஏ-க்கள் குழுக்களாகவும் சிலர் தனித்தனியாகவும் சென்று முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து பேசி வருகின்றனர்.

சந்திப்புக்குப் பிறகு பொதுவெளியிலும் ஊடகங்களிடமும் தங்கள் தொகுதிகளில் நிறைவேறாமல் நிலுவையில் இருக்கும் பணிகளை முடிக்குமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக அந்த எம்.எல்.ஏ-க்கள் கூறினாலும் முதலமைச்சரை மிரட்டும் தொணியில் பேசிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் அணி பிரிந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பழனிச்சாமி தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டார். இதையடுத்து தங்கள் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் மாதம் 25 லட்சம் ரூபாய், தற்போது 10% ஆக இருக்கும் காண்ட்ராக்ட் கமிசன் 35% ஆக உயர்த்தப்படும், ஒவ்வொரு தொகுதிக்கும் சிறப்பு நிதி என கோடிக்கணக்கில் ஒதுக்கப்படும்; அதன் மூலம் பல கோடி எம்.எல்.ஏ-க்களுக்குக் கிடைக்கும் என சசிகலா, தினகரன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் உறுதியளித்ததாகவும் ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததால் எம்.எல்.ஏ-க்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட அமைச்சர் கூட்டம் மட்டும் கோடியில் புரள்வதும் எம்.எல்.ஏ-க்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சர் பதவியும் மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு உரிய அந்தஸ்தும் வழங்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டதாம்.

இவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால், அண்மையில், தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் 11 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்துப் பேசினர். தொகுதியில் தேங்கிக் கிடக்கும் மக்கள் நலப் பணிகள் குறித்து முதல்வருடன் பேசியதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும் கூவத்தூர் வாக்குறுதிகள் தொடர்பாக முதல்வரை மிரட்டும் தொணியில் பேசிவிட்டு வந்தனர் என்பதுதான் உண்மை எனவும் கூறப்படுகிறது.

அந்த எம்.எல்.ஏ-க்கள் குழுவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசு தலைமையில் 10 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் பழனிச்சாமியையும் அமைச்சர் செங்கோட்டையனையும் சந்தித்து அவர்களும் கூவத்தூர் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுமாறும் ஒரு வாரத்திற்குள் பேசியபடி அனைத்து தொகையையும் செட்டில் செய்ய வேண்டும் எனவும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், கடந்த 3 மாதத்தில் அமைச்சர்கள் மட்டும் 40 கோடி வரை சம்பாதித்துள்ள நிலையில், நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? என்ற ஆதங்கத்தில் உள்ளனர்.

உங்களுக்கு எப்படி பணமும் பதவியுமே முக்கியமோ அதேபோல் எங்களுக்கும் பணம் தான் முக்கியம்.. பதவி கூட முக்கியமில்லை எனவும் எனவே ஒரு வாரத்திற்குள் கூவத்தூரில் பேசியபடி பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என முகத்தில் அடித்தாற்போல பேசியிருக்கிறார்கள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள்.

ஒரு வேளை அவர்கள் விதித்த கெடுவான ஒருவாரத்திற்குள் பணம் செட்டில் செய்யப்படவில்லை என்றால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ஒரு கோஷ்டியாக உருவாகி பழனிச்சாமி அரசு ஆதரவை திரும்பப்பெற்றால் அரசு கலையும் அபாயம் உள்ளது. எனவே கூவத்தூரில் பேசிய தொகை செட்டில் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை கோடிக்கணக்கில் பணம் கைமாறினால் வருமான வரித்துறை அடுத்த அதிரடியை மேற்கொள்ளும்.

என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*