முதல்தர கிரிக்கெட்டில் இருந்து இலங்கை ஜாம்பவான் ஓய்வு!

பிறப்பு : - இறப்பு :

முதல்தர கிரிக்கெட்டி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 39 வயதான குமார் சங்கக்காரா, இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக தற்போது விளையாடி வருகின்றார்.

இந்நிலையில் குமார் சங்கக்காரா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் பின்னர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளேன்.

இன்னும் சில மாதங்களில் எனக்கு 40 வயதாகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு, ஓய்வுக்கான நாளொன்றுள்ளது. அதுவரும்போது விலகிச்செல்ல வேண்டும்.

லோட்ஸ் மைதானத்தில் 4 நாள் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே இறுதி சந்தர்ப்பமாகும். பிராந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதற்கான சரியான நேரமும் இதுதான் என குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit