ஐபிஎல் இறுதிப்போட்டியில் போராடிக்கொண்டிருக்கும் போது: அமைதியாக பீர் குடித்த வீரர்கள்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ck

இந்தியாவில் பத்தாவது ஐபிஎல் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை முடிந்தது. இத்தொடரின் சாம்பியனாக மும்பை அணி சாதித்தது. மூன்று முறை ஐபிஎல் தொடரின் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இத்தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட புனே வீரர் பென் ஸ்டோக்ஸ், 14 போட்டிகளில் பங்கேற்றார்.

ஆனால், இறுதி போட்டிக்கு முன்பாக காயம் ஏற்பட்டத்தால், அதற்கான சிகிச்சைக்காகவும், சாம்பியன்ஸ் டிராபி பயிற்சிக்காகவும் இங்கிலாந்து திரும்பினார்.

ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்த தேதியில், இவரும், மும்பை அணியில் போட்டியில் பங்கேற்ற ஜாஸ் பட்லரும், ஒன்றாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். போட்டியை பார்த்தபடியே பீர் அடித்துள்ளனர்.

இந்த விஷயம் தெரிந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் பீட்டர்சன், தங்களது அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்று கிண்ணத்திற்காக போராடும் நேரத்தில், ஸ்டோக்ஸ், பட்லர் இருவரும் ஸ்பெயினில் அமர்ந்து பீர் குடிப்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்று என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit