தூங்கும் முன் 1 டம்ளர் பால், 2 பேரிச்சம்பழம் சாப்பிடுங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பேரிச்சம் பழத்தில் விட்டமின் A, B6, மக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு போன்ற சத்துக்களும், பாலில் புரோட்டீன், புரதச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து மற்றும் மாவுச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

எனவே தினமும் இரவில் தூங்கும் முன் 1 டம்ளர் காய்ச்சிய பசும் பால் மற்றும் 2 பேரிச்சம் பழத்தினை சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

பால் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • பசும்பால் மற்றும் பேரிச்சம் பழத்தினை தொடர்ந்து இரவில் உறங்கும் முன் சாப்பிட்டு வந்தால், நமது உடலின் செயல்பாட்டை சீராக்கி, உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.
  • நமது உடம்பிற்கு புதிய ரத்தத்தை உற்பத்தி செய்து, சருமப் பிரச்சனைகளை தடுத்து, தோலை மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் பாதுகாக்க உதவுகிறது.
  • கண் பார்வைக் கோளாறுகள் மற்றும் நரம்பு தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றுக் கிருமிகள், நம் உடலின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுக்கிறது.
  • பற்கள் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்த, இதயக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை தடுத்து, எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*