நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க எவ்வளவு ‘ரிஸ்க்’ வேணாலும் எடுக்கலாம் – சமந்தா பளீச்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

samantha

சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படம், ‘இரும்புத்திரை’, ‘சாவித்ரி’, 2 தெலுங்கு படங்கள் என்று படு பிசியாக இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சமந்தா சிலம்பம் கற்று வருகிறார். தற்போது அழுத்தமான வேடங்களில் நடிப்பதை மட்டுமே அவர் விரும்புகிறார். அது போன்ற படங்களைத் தான் ஏற்கிறார்.

இதுகுறித்து பேசிய சமந்தா “ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக எவ்வளவு ‘ரிஸ்க்’ எடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். இதற்கு முன்பு சில படங்களில் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். அதற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த அதே வேளையில், எதிர்மறையான விமர்சனங்களும் வந்திருக்கிறது. இருந்தாலும், நான் கவலைப்படவில்லை, என் வேலையை நான் சரியாக செய்ததாகவே கருதுகிறேன்.

சில கதாப்பாத்திரங்கள் மனதளவில் திருப்தி கொடுக்கும் போது பெரிய மனநிறைவு கிடைக்கும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அந்த திருப்திக்கு ஈடாகாது. இப்போது பணம் என்பதை கடந்து, ஒரு நடிகையாக என்னை திருப்தி படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தேடுகிறேன்” என்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit