பீப் சூப் சர்ச்சையில் சிக்கிய நடிகையின் பதவியை பறிக்க மத்திய அரசு முடிவு?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன், டிவி சேனல் ஆகியவை பிரசார் பாரதி போர்டு கட்டுப்பாட்டில் உள்ளது.

இதன் தலைவர், முதன்மை நிர்வாக அதிகாரி, தனி உறுப்பினர்கள் தவிர, பகுதி உறுப்பினர்கள் உள்ளனர். இதில் இந்தி நடிகை கஜோல் பகுதி நேர உறுப்பினராக உள்ளார். பிரசார் பாரதி விதிமுறைப்படி முன் அனுமதி பெறமால் கூட்டத்தில் கலந்து கொள்ளாத உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

நடிகை கஜோல் இதுவரையில் நடந்த 3 கூட்டத்தில் ஒரு முறை கூட கலந்து கொள்ளவில்லையாம், நடிகையின் பகுதி நேர உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.

பிரசார் பாரதி அளிக்கும் தகவலை பொறுத்து நடிகை பதவி பறிப்பு குறித்து மத்திய அரசு முடிவு எடுக்குமெனவும்.. முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ளதாது இது குறித்து நடிகை கஜோல் வருத்தம் தெரிவித்து இருந்தார். சமீபத்தில் பாஜக ஆளும் மாநிலத்தில் மாட்டு கறி சூப் குடித்தாக சர்ச்சையில் நடிகை சிக்கினார்மேலும் இவருக்கு ஆதரவாக மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் இவரின் பதவி பறிக்கப்படுமென பரவலாக பேசப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*