ரஜினியின் சுயரூபம்! போதையில் அட்டூழியம், கலாட்டா! ஏர்ப்போர்ட்டில் கைது!! (ஸ்பெஷல் ரிப்போர்ட்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலக அளவில் ஏராளமான ரசிகர்களைக்கொண்ட தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தனது ரசிகர்களை 12 வருடம் கழித்து சந்தித்தார்.

சென்னை, கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக தெரிவித்தார்.

இநிலையில், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து, பல்வேறு தலைவர்களும், ரசிகர்களும் தங்களுடையது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, சினிமாக்காரர்களை அரசியலில் நுழையவிடக்கூடாது என ரஜினிக்கு மறைமுக எதிர்ப்பை தெரிவித்தார். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூவும், ரஜினியால் தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது எனவும், அவர் அரசியலுக்கு ஏற்றவர் அல்ல எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த காலங்களில் அவரின் சுயரூபம் எப்படி இருந்தது என நாம் உற்றுநோக்கி பார்க்கும்போது, ஒரு செய்தி நம் கண்ணுக்கு சிக்கியது.

கடந்த 1979ம் ஆண்டு, ஜூன் 21ம் தேதி, ரஜினி படபிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அன்று இரவு சென்னை திரும்புவதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது குடிபோதையில், ‘‘இந்தியர்கள் எல்லாம் நாய்’’ என திட்டியுள்ளார்.

சிறிது நேரத்திலேயே அவருடன் வந்திருந்த நண்பருக்கும் அவருக்குமே தகராறு ஏற்பட்டு கலாட்டா செய்யத் தொடங்கினராம். விமானநிலைய அதிகாரிகள் சமரசம் செய்து ரஜினியை அருகிலிருந்த கண்ணாடி அறைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் அங்கும் ரஜினியின் அட்டகாசம் தலைவிரித்தாடி, அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்திருக்கிறார்.

இதனால், செய்வதறியாமல் விமானநிலைய அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், ரஜியை கைது செய்துள்ளனர். பின்னர் அவரின் விமான டிக்கெட்டையும் ரத்துசெய்துள்ளனர். இந்த சம்பவத்தால் விமான நிலையமே பரபரப்பாக இருந்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்த செய்தி அப்போது தினசரிகளில் வெளியயாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியின் பேப்பர் கட்டிங் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*