சத்யராஜ் தலையில் கால் வைத்த பிரபாஸ்: பளார் என்று அடித்த புரட்சித் தமிழன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாகுபலி படம் குறித்து வெளி வரும் ஒவ்வொரு தகவலும் ஆச்சரியம் கொடுப்பதகவே இருக்கிறது. அதிலும் சத்யராஜ், பிரபாஸ் குறித்து வெளிவந்த செய்தி படு ஆச்சரியம்.

கதைப்படி பாகுபலியின் காலை எடுத்து சத்யராஜ் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை பிரபாசிடம் இயக்குனர் சொல்லவில்லையாம்.

சத்யாராஜும் சொல்லவில்லை. சொன்னால் பிரபாஸ் ஒத்துக் கொள்ள மாட்டார். அதனால் அந்த சீன் எடுக்கும் போது காலை எடுத்து தலையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் ராஜமௌலி கூறி விட்டாராம்.

ஷூட்டிங் ஆரம்பம். தண்ணீரில் வழுக்கியபடி செல்லும் சத்யராஜ் (கட்டப்பா) பா…கு…ப..லி…. என்று உணர்ச்சி போங்க கத்தியபடியே பிரபாஸின் வலது கால்களை எடுத்து தலையில் வைத்தார்.

ஆடிப் போனார் ஹீரோ. பட்டென்று காலை உதறியவர் நடுங்க ஆரம்பித்துவிட்டார். இதை படக்குழுவினர் எதிர்பார்த்தது தான். இயக்குனரும், எதிர்பார்த்தார்.

இயக்குனர் கட் சொல்லிவிட்டார். பிரபாசிடம் “கதைப் படி கட்டப்பா ராஜ விசுவாசி. குழந்தையின் கால்களை எடுத்து தலை மேல் வைப்பது அவர்களின் ராஜ விசுவாசம். எனவே இப்போது கதைக்கு இது அவசியம்”என்று எவ்வளவோ சொல்லியும் பிரபாஸ் முடியவே முடியாது என்று கூறி விட்டார்.

“சத்யராஜ் சார் எவ்வளவு பெரிய நடிகர், அற்புதமான மனிதர், தமிழினப் போராளி அவரின் தலையில் கால் வைத்தால் தமிழக மக்களுக்கு என் மீது கோபம் வரும்” என்று கூற, பளார் என்று ஒரு அறை விட்டாராம் சத்யராஜ்.

“இந்த அடி நடிப்பு” என்று வந்து விட்டால் பெரியவர், சின்னவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பார்க்கக் கூடாது என்று புரிய வைத்தாராம்.

அதன் பின் நீண்ட யோசனைக்குப் பின் தலையில் கால் வைத்தாராம் ஹீரோ.

தமிழன் தமிழன்தான்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*