புதுவித போதை மயக்கத்தில் தான் ஓவியம் சிரிக்கிறதாம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அந்த ஓவியமான களவாணி நடிகைக்கு சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட சோகம்… இருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சதா சர்வநேரமும் சிரித்தபடியே வளைய வருகிறார் அம்மணி! யார் எது கேட்டாலும் சிரிப்பு தான் பதிலாக வருகிறது ஓவியத்திடமிருந்து… இது எப்படி? என விசாரித்ததில்… அம்மணிக்கு ஒருமாதிரியான புதுமாதிரி போதை பழக்கம் இருக்கிறது… என்பது தெரியவந்தது. அதுநீங்கள் நினைப்பது மாதிரி பீர், பிராந்தி, விஸ்கி எல்லாம் கிடையாது. அதையும் தாண்டி காஸ்ட்லியானது அம்மணியின் போதை…

அதாகப்பட்டது ஹூக்கா புகை போதை பிரியையாம் அம்மணி. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கிளம்பும் போதே பழைய காலத்து குமட்டி அடுப்பு மாதிரி ஒரு எலக்ட்ரானிக் ஹூக்கா உபகரணத்தை கையோடு எடுத்து வருவாராம். அதன் மின்வயரை பிளக்பாயிண்ட்டில் சொருகி அந்த ஸ்டீல் உபகரணத்திற்குள் ஜிகினா பேப்பரில் சுற்றிய ஏதோ ஒரு வித போதை வஸ்தை வைத்து அதிலிருந்து வௌிவரும் புகையை அடுப்பு ஊது குழல் மாதிரி ஒரு உபகரணத்தின் உதவியோடு இரண்டு இழுப்பு இழுத்து விட்டுதான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே ஓவியம் வருவாராம்.

அதேமாதிரி ஷூட்டிங் முடிந்து அறைக்கு திரும்பியதும் அதில் இரண்டு இழுப்பு இழுத்து விட்டு தான் தூங்க போவராம். அதுதான் அம்மணியின் அதிகப்படியான மகிழ்ச்சி மனநிலைக்கு காரணம் என்கிறது விவரமறிந்த வட்டாரங்கள்! நெசந்தான் என்ன.?!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*