நடிகை சமந்தா திருப்பதியில் எதற்காக நேர்த்திக் கடன் செலுத்தினார் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகை சமந்தா தமிழில் நான் ஈ, கத்தி,பாணா காத்தாடி,நீ தானே என் பொன்வசந்தம்,தங்கமகன்,தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தாவிற்கும், நடிகர் நாகார்ஜூனா மகன் நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.

தற்போது சமந்தா தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், தமிழில் சாவித்ரி படத்திலும், நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களில் சமந்தா பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பை வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்து விட்டு அக்டோபர் மாதத்தில் இந்து-கிறிஸ்துவ முறைப்படி சமந்தா திருமணம் நடக்க உள்ளது.

இந்த நிலையில் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு சென்றிருந்த நடிகை சமந்தா நேர்த்திக் கடன் செலுத்தி, சாமி தரிசனம் செய்தார். திருமணம் தேதி மாற்றப்பட்டதாக வந்த வதந்தி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு திருமணம் வழக்கம் போல் நடக்கும் எனவும், பல ஆண்டுகளாக செய்யாமல் இருந்த நேர்த்திக்கடன் செலுத்த வந்ததாக சமந்தா தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*