சாகசம் எல்லாம் செய்ய முடியாது: ஒப்புக் கொண்ட கோஹ்லி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்திய அணிக்கு மூன்று வித போட்டிகளிலும் தலைவராக உள்ளவர் கோஹ்லி.

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபில் தொடரில் இவர் தலைமையிலான பெங்களூரு அணி தொடர் தோல்விகளில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பெற்று தொடரிலிருந்து வெளியேறியது.

இந்நிலையில் கோஹ்லி அவரது ஆடி காரை சமீபத்தில் லேட்டஸ்ட் மொடல் காராக மாற்றியுள்ளார். அந்த காரை கோஹ்லி பயிற்சிகளத்தில் சுமார் 280 கி.மீற்றர் வேகத்தில் ஓட்டியுள்ளார்.

இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், நான் டெல்லியில் பிறந்ததால் இங்கு வந்தாலே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஓய்வு கிடைக்கும் நேரங்களில், அதிவேகமாக கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதனால் தான் புதுகாரை ஓட்ட முடிவு செய்தேன்.

தற்போது 280 கி.மீற்றர் வேகத்தில் ஓட்டினாலும், இதற்கு முன் 290 கி.மீற்றர் வேகத்தில் கார் ஓட்டியுள்ளேன்.

இதற்காக தேர்ச்சி பெற்ற ஓட்டுநர்களைப்போல என்னால் கடைசி நேரத்தில் பிரேக் அடித்து சாகசம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*