தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்! எத்தனை பேருக்கு தெரியும்? கம்போடியாவின் அங்கோர் வாட்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்றளவும் அசைக்க முடியாத ஒரு கோவில் என்றால் அது கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் எனும் இடத்தில் தமிழ் வழியில் வந்த மன்னனால் கட்டப்பட்ட அங்கோர் வாட் எனும் இந்து ஆலயம் தான்.

இன்றைக்கு இருக்கும் அறிவியல் அறிஞர்கள் கூட கண்டு வியக்கும் ஒரு பிரம்மாண்ட படைப்பு இது. சுமார் 500 ஏக்கர் நில பரப்பில் கட்டப்பட்டு இந்த கோவிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம்.

கோவிலை சுற்றிலும் மிக பெரிய அகழி,பிரம்மாண்டமான மதில் சுவர்,உயர்ந்து நிற்கும் கோபுரங்கள், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள் என அங்கோர் வாட் ஒரு உலக அதிசயமாகவே காட்சியளிக்கிறது.

விஷேசம் என்னவென்றால் தற்போது வரை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள எந்த ஒரு தொழில்நுட்பம் வாய்ந்த கேமராவிலும் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை. இந்த கோவிலை முழுமையாக படம் பிடிக்க வேண்டும் என்றால் பூமியில் இருந்து சுமார் 1000 அடிக்கு மேலே வானத்தில் இருந்து படம் எடுத்தால் மட்டுமே முடியும்.

இன்றைக்கு இருக்க கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட சுமார் 300 வருடங்களாவது ஆகும் என்று பொறியாளர்கள் கூறுகின்றனர். அப்படி இருக்க எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 27ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பதை நினைக்கும் போதே பிரம்மிக்க வைக்கிறது தமிழனின் திறமை.

ஆம், இவ்வளவு பிரம்மாண்டமான அங்கோர் வாட் கோவிலை கட்டியவர், தமிழ் வழியில் இருந்து வந்தவரான இரண்டாம் சூர்ய வர்மனே. இக்கோவிலை மேல் இருந்து பார்க்கும் போது மூன்று அடுக்குகளாக தோற்றமளிக்கிறது. மேலும், இக்கோவிலுக்கு நான்கு பிரம்மாண்டமான நுழைவு வாயில்களும் உள்ளன.

நமது திராவிட கலைகளை கொண்டு கட்டப்பட்ட இந்த கோவிலை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய அரசு, கம்போடிய தேசிய கொடியில் இதனை தேசிய சின்னமாக பொறித்துள்ளது, இதன் தனி சிறப்பு.

அங்கோர் வாட் முதலில் விஷ்ணு ஸ்தலமாக தான் கட்டப்பட்டது. பின் நாளில் ஆட்சிக்கு வந்த மன்னர் 7ம் ஜெய வர்மன் இதனை புத்த கோவிலாக மாற்றினார். எனவே அன்றில் இருந்து இன்று வரை அங்கோர் வாட் புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால், 16ம் நூற்றண்டிற்கு பின்னர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு, சிதிலமைடைய தொடங்கியது.

கடந்த 1992ம் ஆண்டு யூனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்ததுடன், இதனை மேலும், சிதைவுறாமல் பராமரித்து வருகிறது.

வானளவு பெருமை கொண்ட தமிழினத்தின் புகழை, தமிழன் மறந்து தவிக்கும் இந்த 21ம் நூற்றாண்டில், தமிழனின் பெருமையை இந்த உலகிற்கு எடுத்து காட்டும் காலத்தை வென்ற காவியமாக விளங்குகிறது இந்த அங்கோர் வாட்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*