இந்த நாளை தான் எதிர்பார்த்தோம்: புனே அணியை பழிதீர்க்க காத்திருக்கும் ரோகித்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐபிஎல்-லில் மும்பை அணியை தொடர்ந்து வீழ்த்திய புனே அணியை பழிதீர்ப்பதற்கு காத்துக் கொண்டிருப்பதாக மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் திகதி தொடங்கிய பத்தாவது ஐபிஎல் தொடர் நாளையுடன் முடியவுள்ளது.

இறுதிப்போட்டியில் ஸ்மித் தலைமையிலான புனே அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை வென்ற பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோகித் சர்மா கூறுகையில், இந்த நாளுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தோம்.

பவுலர்கள் சரியான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றியதால், ஓட்டங்களை கட்டுப்படுத்த முடிந்தது. புனே அணியும் இந்த போட்டியை பாத்திருப்பார்கள்.

இறுதிப்போட்டியில் அவர்களை நோக்கி தான்வந்து கொண்டிருக்கிறோம். கிண்ணத்தை கைப்பற்ற ஒரே ஒரு வெற்றி தான் தேவை. அதை நிச்சயம் பெறுவோம், புனே அணியை பழிதீர்ப்போம் என்று கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பத்தாவது ஐபில் தொடரில் மும்பை அணி, புனே அணியிடம் மூன்று முறை தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*