
நடப்பு ஐபிஎல் தொடரில் அசத்தலாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐதராபாத் நட்சத்திர பந்து வீச்சாளர் புவனேஷ்குமார், நடிகை அனுஸ்மிரிதி சர்காருடன் டேட்டிங் செல்லவில்லை என மறுத்துள்ளார்.
ஐபிஎல் 2017 விக்கெட் வேட்டையில் அசத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் புவனேஷ்குமார்.
இன்ஸ்டாகிட்ராமில் உணவு விடுதி ஒன்றில் அமர்ந்தவாறு ஜூஸ் அருந்தும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றி, என்னுடன் டேட்டிங் வந்த நடிகையின் புகைப்படத்தை விரைவில் பதிவிட இருக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்று புவனேஷ்குமாருடன் டேட்டிங் செல்வதற்கு முன் அந்த நடிகையுடன் காரில் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு உண்மையை உடைத்தது.
அந்த நடிகை தெலுங்கில் நடித்து வரும் அனுஸ்மிரிதி சர்கார். பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், நடிகை அனுஸ்மிரிதி சர்காருடன் டேட்டிங் சென்றதாக பரவி வரும் செய்தி வதந்தி எனக் கூறி புவனேஷ்குமார் இதை மறுத்துள்ளார்.