ஐசிசி தொடரில் சாதித்த இலங்கை வீரர்கள்: யார் முதலிடம் தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

lnka

ஐசிசி நடத்தும் தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் படி ஐசிசி நடத்திய உலகக்கிண்ணம் 50-ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் (1996, 2007, 2011) இலங்கை அணி இறுதிசுற்று வரை போயுள்ளது.

அதில் 1996-ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது. அதே போன்று சாம்பியன் டிராபி தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு,2002-ஆம் ஆண்டிற்காக சாம்பியன் டிராபி கிண்ணத்தை இலங்கை அணி, இந்திய அணியுடன் பகிர்ந்து கொண்டது.

அதே போன்று தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள டி20 போட்டிகளிலும் இலங்கை அணி அற்புதமாக விளையாடி வருகிறது. 20 ஓவர் போட்டிக்கான உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி (2009, 2012, 2014) ஆகிய ஆண்டுகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

2014-ஆம் ஆண்டிற்கான கிண்ணத்தை கைப்பற்றியும் அசத்தியது. அந்த வகையில் ஐசிசி நடத்திய தொடர்களில் சிறப்பான பந்து வீச்சை பதிவு இலங்கை வீரர்கள் யார் தெரியுமா? அவர்களில் முதல் இடத்தில் எந்த வீரர் இருக்கிறார் தெரியுமா?

முதல் இடத்தில் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் உள்ளார். இவர் 2012-ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணம் போட்டியில் 4 ஓவர் வீசி 8 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்த படியாக பர்வீஸ் மகரூப் உள்ளார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி 14 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சமிந்த வாஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி 25 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் இவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் மலிங்கா கென்யா அணிக்கெதிரான போட்டியில் 38 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் நான்காவது இடத்தில் உள்ளார்.

ஐந்தாவது இடத்தில் ரங்கனா ஹெராத் உள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கிண்ணம் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி 3 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit