கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகை நால்வர் கைது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப் பகுதி ஒன்றில் இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

குறித்த விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில் இயங்கி வருவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்ன அவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக

கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான்யறாபக்ச அவர்களின் பணிப்பின் பெயரில் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சன அவர்களால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் குறித்த வீட்டை சோதனை இட விண்ணப்பம் செய்யப்பட்டதனை அடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதி அவர்களினால் குறித்த வீட்டை தேடுதல் நடத்த /பார்வையிட, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைச் சட்டத்தில் அதற்கென தரப்பட்டவாறான தத்துவங்களை பிரயோகிக்கவும் கடமையை புரியவும் கிளிநொச்சி உதவிப் பொலிஸ் பரிசோதகர் தர்சன அவர்களின் குழுவினருக்கு நேற்றுமுன்தினம் அனுமதி வழங்கப்பட்டது

அதன் பிரகாரம் குறித்த குழுவினர் பொலிசார் ஒருவரை சிவில் உடையில் அனுப்பி உறுதிப்படுத்தியதன் பின்னர் குறித்த குழு வீட்டை முற்றுகை இட்டு நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களை பொலிசார் விசாரணைக்கு உட்ப்படுத்தி நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப் படுத்த உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இவ் விபச்சார விடுதியானது கிளிநொச்சியில் பல மாத காலமாக இயங்கி வந்ததுடன் இதனை முடக்கும் முயற்சியில் கிளிநொச்சியில் உள்ள கல்வியலாளர்கள் , பொது அமைப்புக்கள் ,ஊடகவியலாளர்கள் என பலர் ஒன்றிணைந்து பல நடவாடிக்கைகளை எடுத்ததற்கான பரிசு என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*