விமான பணிப்பெண் முகத்தில் வெந்நீரை ஊற்றிய பயணியால் பரபரப்பு ! !(வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இடத்திற்கு சென்று விமானத்தில் பணிபெண்ணின் முகத்தில் பயணி ஒருவரால் வெந்நீர் ஊற்றப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது..

ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம் கடந்த வியாழன் அன்று மாலை 174 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அந்த விமானத்தில் தனது ஆண் நண்பருடன் பயணித்த சீனப் பெண் பயணி ஒருவர், இரண்டு பேருக்கும் அருகருகே இடம் கொடுக்காததை கண்டித்து விமானத்தின் பெண் ஊழியர் மீது வெந்நீர் ஊற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார். மேலும், விமானத்தை வெடி வைத்து தகர்க்கப் போவதாகவும் மிரட்டினார்.

முதலில் ஒரு கிண்ணத்தில் நூடுல்ஸ் வாங்கிய அந்தப் பெண், பின்னர் அதே கிண்ணத்தில் வெந்நீர் கேட்டுள்ளார். சூடான தண்ணீரை பணிப்பெண் கொடுத்துள்ளார். அதைக் கொண்டு வந்த பணிப்பெண்ணின் முகத்திலேயே சீனப் பயணி ஊற்றினார்.

இதனையடுத்தும் குறித்த விமானம், முவாங் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.. பின் அந்த இருவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வெந்நீர் ஊற்றப்பட்ட விமான பணிப்பெண் ஊழியர் தற்போது நலமாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்தது.

வெளிநாடுகளில் எவ்வாறு நடத்துகொள்வதென்று தங்கள் நாட்டு மக்களுக்கு கற்றுத்தர வேண்டுமென்று சமீபத்தில் சீனத்தூதரகத்தில் நடந்த சந்திப்பில் சீன ஜனாதிபதி பேசியது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*