சுவிட்சர்லாந்தில் தலைநகரில் ராஜகோபுரத்துடன் அருள்பாலிக்கும் சிவபெருமான் (படங்கள் , வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திரைகடல் ஓடியும் திரவியம் தேடினாலும் தமது சமய கலாசார விழுமியங்களை பாதுகாப்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள் சுவிஸ் வாழ் தமிழர்கள்.

அழகிய மலைத்தொடரையும் சிறந்த வாழ்க்கை வாழக்கூடிய முதல் பத்து இடங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபையால் தெரிவுசெய்யப்பட்ட நகராம் சுவிஸ் தலைநகரில் அனைவராலும் இலகுவாக சென்றடைய கூடிய பிரதான Freiburgstrasse வீதியில் A 1 தேசிய நெடுஞ்சாலையை, மற்றும் புகையிரத நிலையம் நோக்கியதான ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது ஞானாம்பிகை சமேதர ஞானலிங்கேஸ்வரர் ஆலயம்.

ஐந்து இளைஞர்களின் அளப்பரிய முயற்சிகளால் உருவாக்கப்பட்ட இவ் ஆலயம் தற்போது வளர்ச்சி பெற்று ராஜகோபுரத்துடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மகா கும்பாவிசேடகமானது எதிர்வரும் மாசி மாதம் முதல் தினத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

சிவாலய அடிக்கல் நாட்டு விழா   2012 

சர்வமத பீடத்துடன் ” Haus der Religionen “மிகவும் சிறப்பாகவும் எழிலாகவும் ராஜகோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இவ் ஆலயத்தில் அனைத்து பூஜை வழிபாடுகளும் தமிழில் இடம்பெறுவது சிறப்பானதாகவும் தமிழர் பாரம்பரியத்தை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு நிலைநிறுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ஞானாம்பிகை அருளும், ஞானலிங்கப்பெருமான் திருவும், சித்தப்பெருமக்கள் நல்லாசியும் பணிந்து பெற்று, ஆயிரம் திருநற் கனவுகள் தாங்கி, 11. 07. 2014 வெள்ளிக்கிழமை ஆடவைத் திங்கள் உத்தர நிறைமதி நாளில், செந்தமிழ் வழிபாட்டுத் திருமறைத் திருக்கோவில் திருப்பணிவேலைகள் இறைவழிபாட்டுடன் பெருமான் இணையடி தொழுது தொடங்கப்பட்டு தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.

தத்தமது ஊர்களில் உள்ள கோவில்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி கொடுக்கும் சுவிஸ் வாழ் அன்பர்களிடம் இருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுவதாக ஆலய திருத்தொண்டர் சபையினர் தெரிவித்ததுடன் உதவிகளை அனுப்பவேண்டிய விபரங்கள் வருமாறு :

தபால் கணக்கு இல: Postfinance 30-468890-2
கணக்குரிமை: Verein SAIVANERIKOODAM,
Laubeggstr.21, 3006 Bern, Switzerland
வங்கி/ Bank: Credit Suisse, 3001 Bern
கணக்கு இல/ Konto: 771 606 – 21
IBAN Nr: CH26 0483 5077 1606 2100 0
BC Nr: 4835/ SWIFT-Adresse: CRESCHZZ80A

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

http://www.europaplatz-bern.ch

Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (1) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (2) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (3) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (4) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (5) ??????????????????????????????? Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (7) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (8) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (9) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (10) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (11) Newly Builded Hindu Temple (Sivan) in Europaplatz bern (12)

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*