இந்த அணியைக் கண்டால் பயமாக இருக்கிறது: 360 டிகிரி டிவில்லியர்ஸ் ஓபன் டாக்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்தவரும், ஐபிஎல்-லில் பெங்களூரு அணிக்காக விளையாடியவருமான டிவில்லியர்ஸ் இந்திய கிரிக்கெட் அணி வலுவடைந்து வருவது மிகவும் பயமூட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார்

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ். இவரை ரசிகர்கள் 360-டிகிரி வீரர் என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு இவருடைய துடுப்பாட்டம் பிரபல்யமானது.

இவருக்கு பந்து வீசுவதற்கு எதிரணி வீரர்கள் சற்று பயத்துடனே வீசுவர். இந்நிலையில் அவர் தான் கிரிக்கெட்டைப் பார்த்து பயப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ஐபிஎல் தொடரினால் இந்திய கிரிக்கெட் வலுவடைந்து கொண்டே வருகிறது.

உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய அழுத்தங்களை, நெருக்கடிகளை சவாலுடன் சந்திக்கும் இளம் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று வருகின்றனர்.

மற்ற எந்த நாடுகளிலும் இது இல்லை. பிற நாடுகள் ஆமை வேகத்தில் முன்னேறி வருகின்றன. அவர்களும் இந்தியாவை எட்டிப்பிடிப்பார்கள்.

ஆனால் தற்போதைய நிலைமைக்கு இந்தியா உச்சத்தில் இருப்பதாகவே கருதுவதாகவும், இந்தியாவில் நிறைய, பெரிய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, எப்போதும் சிறந்த இளம் வீரர்கள் வந்தவண்ணம் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பத்தாவது ஐபிஎல் தொடரில் ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், ரிஷப் பாண்ட் போன்ற வீரர்கள் அபாரமாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*