புதிய ஏற்றுமதி சந்தையை கண்டறியும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது : ஹரின் பெர்னாண்டோ

பிறப்பு : - இறப்பு :

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் ஊடாக புதிய ஏற்றுமதி சந்தையை கண்டறியும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின ஆட்சியில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்காமையினால் நாட்டில் ஏற்றுமதி சீர் குலைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வரிச்சலுகையினால் 4 பில்லியன் யூரோக்கள் பெறுமதி வாய்ந்த ஐரோப்பிய சந்தையில் இணைந்து கொள்ளும் வாய்ப்பும் நாட்டிற்கு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

நாட்டை முன்னெடுத்து செல்வதற்காக வெற்றிகரமான ஆரம்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit