கோழிகூவுது’ விஜி இந்த அழகு தேவதையை சீரழித்துக் கொன்றவர் யார்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மனம் கவர்ந்த நமது நடிகையர் திருமணம் செய்து கொள்வது ஒரு பெரிய விஷயமே இல்லை. நம்மை விட்டு விலகினாலும் அவர்கள் கணவரோடு, பிள்ளைகள் பெற்று நன்றாக வாழ்ந்து வருவார்கள்.

என்றோ ஒரு நாள் நம் கண் முன்பே தோன்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பத்து, இருபது வருடங்கள் நம்மை திரையில் மகிழ்ச்சி படுத்திய ஒரு நடிகை, அல்லது நடிகர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போவது கொடுமை.

அவர்கள் ஏன் திடீரென்று தற்கொலை முடிவுக்கு வருகிறார்கள். கோழிகூவுது விஜி என்கிற ஒரு அற்புத நடிகை.. பெண்களுக்கும் பிடித்த அழகி.

கள்ளம் கபடமற்ற சிரிப்பால் பத்து வருடங்களுக்கும் மேலாக நம்மை மகிழ்ச்சிப்படுத்திய விஜியை ஒரு இயக்குனர் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்தார்.

நடிகையும் அவர் மீது உயிரையே வைத்திருந்தார். ஆனால் இங்குதான் ஒரு தப்பை எல்லா நடிகைகளும் செய்கிறார்கள்.

காதலிக்க ஆரம்பித்ததும் எல்லாமே காதலன் தான் என்று நம்பி தங்கள் உடம்பைக் கொடுப்பதோடு, தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளையும் வாரி வழங்குகின்றனர்.

ஒரு கட்டத்தில் நடிகையின் உடல் போரடித்து விட சொத்துகளை அபகரிப்பது ஒன்றே நோக்கமாகி விடுகிறது அந்த காதலர்களுக்கு.

இதனால் கடும் அதிர்ச்சி அடையும் நடிகைகள் மனசு உடைந்து, நொறுங்கிப் போய் விடுகின்றனர். அடுத்த கட்டமாக இவ்வளவு தான் வாழ்க்கையா என்று முடிவெடுத்து தற்கொலை முடிவிற்கு வருகிறார்கள்.

ஷோபாவின் தற்கொலைக்கு இயக்குநர் பாலுமகேந்திரா உடனான காதல் பிரச்சினைக்குள்ளானதே காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது.

படாபட் ஜெயலட்சுமியின் மரணத்துக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகனும், குங்குமம் கதை சொல்கிறது என்ற படத்தில் படாபட் ஜெயலட்சுமி உடன் சேர்ந்து நடித்த எம்.ஜி.சி.சுகுமாருடன் ஏற்பட்ட காதல் முறிந்து போனது காரணமாகப் பேசப்பட்டது.

அதேபோல்தான் சில்க்கின் மரணமும். அவரது நிழலாகவே இருந்த அவருடைய காதலருக்கும் சில்க்குக்கும் ஏற்பட்ட பிரச்சினையால்தான் தூக்கில் தொங்கினார்.

பிரதியூஷாவின் மரணம் இன்னமும் மர்மம்தான். பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் ஏற்பட்ட உறவு, அவரது குடும்பத்தில் புயலைக் கிளப்ப, தன் ஆயுளை முடித்துக் கொண்டார் மோனல்.

தற்கொலை செய்து கொண்ட நடிகைகள் அனைவருமே காதலுக்காகத் தங்களின் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது வேதனையான வெடித்துக் கிளம்புகிறது. காதலுக்காகவே தற்கொலை செய்து கொள்ள தோன்றும் எண்ணம் எப்போது முடிவிற்கு கொண்டுவரப்படும்?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*