கார்த்திகை கல்லறை மலர்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இதயத்துள் இசைக்கும் விடுதலை இராகங்களே…
இந்நாள்..
எம் விழிகளுக்குள் நீர் மட்டுமே நிழலாடும் திருநாள்..
எம் உணர்வுக்குள் புகுந்து அனல்மூட்டும் இந்நாள்
விழிகளில் தாகமும் உடலினில் வேகமும் கொண்டு
விருட்சங்களாகி நின்றெக்கு நிழல் கொடுத்தவரே..
விளக்குகள் கரமேந்தியுமை பூசிக்கும் ஒளிநாள் இன்று…
செங்கொடிகள் நீவிர் சிந்திய செந்நீரை நினைவுறுத்த
செங்களமாடி நின்ற உமை சிந்தையில் ஏந்தும் நாளின்று..

வரிசையில் நின்று உங்கள் உருவப்படங்களிடையே
தெரிந்த முகங்களைத் தேடித்தேடி.. கண்டதும்
தயங்கிச் சில கணங்கள் கால்கள் ஓய்ந்திட
ஆசையாய் உம் முகம் வருடி நெகிழ்ந்து..
அன்போடு கார்த்திகை மலரினை காணிக்கை தந்து..
அன்று பழகிய நாட்களை அசை போட்டுக் கொண்டே
கனக்கும் நெஞ்சோடு விழி சொரியும்
கனம் மிக்க நாளிதன்றோ, கனம் செய்யும் நாளிதன்றோ…

கல்லறையில் பூத்த எங்கள் கார்த்திகை மலர்களே..
இல்லை தமிழர்க்கு இனி வாழ்வு என்றே எம்மை
இல்லாதொழித்த பகைவரின் முன்னே
இடியாகி புயலாகி வெடியாகி நின்றவரே
முடிவொன்று சொல்ல மீண்டும் வாரீரோ நீங்கள்
முடி சூடி நின்ற தமிழ்த்தாயின் மண்ணில்…
விடிவெள்ளியாக மீண்டும் உதிப்பீரோ
விளக்கேற்றி எங்கள் வாழ்வொழிர வைப்பீரோ…

நேரில் நின்றபோது எம் நேசத்தம்பியாய் தங்கையாய்
அண்ணனாய் தம்பியாய் அன்பான தோழர் தோழியராய்
நிகரற்ற உறவுகளாய் எம்மோடு உறவாடி நின்றவரே-இன்று
நெய்விளக்கேற்ற வைத்து நெஞ்சத்து தெய்வங்களானீர்
நெடிய மூச்சுடன் உம்மை நினைந்துருக வைத்தீரே..
நாமழிந்து நாடழிந்து நாதியற்று நாமலைந்த போதும்
நாமெல்லாம் தமிழரென்னும் வல்லைமை தந்தவரே
ஒற்றைத்தமிழன் உள்ளவரை ஓயாதும் நினைவலைகள்…
வாழ்க மாவீரம்..
வாழிய தமிழ் வீரம்..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*