அவள் ஓர் பனிப்பாவை

பிறப்பு : - இறப்பு :

கடி வாளம் போடத குதிரை போல்
என் உள்ளம் உனைத்தேடி வருகின்றதே
கைகால்கள் முளைத்த காற்றாகி
என் காதல் உன் மூச்சில் நிறைகின்றதே…

உன் கண்பார்வை விழுகின்ற இடம் தேடியே
நான் கைதாகிப் போகின்றேன் உனதழகிலே
அந்த மின்சார முத்ததில் உண்டான
சத்தம்தான் என் நெஞ்சை இம்சிக்குமே….

நீ பூசூடி ஒரு மாதாய் வலம் வரும்போதிலே
அந்த பூகூட உனை கண்டு வியக்கின்றதே
இந்த பூவையின் நிறம் பார்க்க தினம்
வானத்தில் விண்மீன்கள் உதிக்கின்றதே…

கண்ணாடி மோட்சங்கள் பெற்றதடி
உந்தன் அழகை அது தினம் பருகியே…
நீ கைதொட்ட சிறு புல்கூட
கர்வத்தில் எனைப்பார்த்து சிரிக்கின்றதே…

உனை தீண்டி விரைந்தோடும்
குளிர் நீர்கூட பன்னீரின்
வாசத்தில் இங்கே மணக்கின்றதே
பருவத்தை அடைகாக்கும் சிறு பறவையே

பதினாறு வயதான ஒரு பாவையே
உன் விழி தாண்டி தொடராதே என் பாதையே
வரும் நேரம் பார்த்திடவே வரம் கேட்கிறேன்
உனை தீண்டும் பனிக்காற்றை சிறை செய்கிறேன்…

ஆடைக்குள் ஒழிந்திட்ட உன் அழகை
நாணத்தில் மறைக்கின்றாய் முகம்மூடியே
ஆசைக்குள் அடங்காத என் நெஞ்சையே
அது ஆட்டியே வைக்கின்றதே என் செய்யுவேன்,,,,,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit