சுயம்புச் சுத்தம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முடிந்து போயிருந்த
மூன்றாம் வகுப்பின் கடைசி
நாளொன்றில்…
வாத்தியார்
சொல்லிப் போயிருந்ததாய்
ஞாபகம்…..
சுத்தம் சோறு போடும்…

அடுத்த நாள் அப்பா
இறந்துவிட….
அசுத்தங்கள் களைவதே
வாழ்க்கையாகிப் போனது…

நெடிகளுக்குச் சிரித்து
பூவாசனைகளை ஒவ்வாமையென
ஒதுக்குமளவிற்கான
பந்தம்…. அசுத்தங்களோடு…!!

எந்தப் புகை மூட்டத்திற்கும்
திணறலால் எனக்கு
மரணம் நேராதெனத்
தெரியும்…

அப்படித்தான் அன்றைய
நாளும்… கழிப்பறை
கழுவி… கழிவுக்கறைகளோடு
சாலை கடக்கையில்..

வெளிச்சக் குப்பைகள்
குவிய… சுத்தமானதொரு
தரைமூலையை
முகமூடியிட்டு சுரண்டிக்
கொண்டிருந்தார்… எவரோ….

பிழைப்புக்குப் பிரச்சினையென
கலங்கி மயங்கிய
மரணத்துக்கு முன்பான
அடுத்தகணம்….

தீர்ந்து போயிருந்த
வெளிச்சக் குப்பைகளைப் போலவே
காணாமல் போயிருந்தது
கூட்டம்…

வயிற்றுக்குப் பங்கமில்லை
என .. ஆசுவாசங்களோடு
எழுகையில்…

என்னையும் கூட்டிப் போயேன்
என்று பாவமாக்
கெஞ்சியது… கழற்றி
வீசிப் போயிருந்த முகமூடி….!!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*