இராக் ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது ஐ.எஸ்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

heli

இராக்கில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பினர் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இதில், ஹெலிகாப்டரிலிருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர்

இந்த சம்பவத்தையடுத்து, தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஐ.எஸ். அமைப்பின் திறன் குறித்த கவலை பாதுகாப்பு அதிகாரிகளிடையே அதிகரித்துள்ளது. தலைநகர் பாக்தாதுக்கு 95 கி.மீ. தொலைவிலுள்ள, ஷியா பிரிவினரின் புனித நகரான சமராவில் இந்தத் தாக்குதலை பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை நிகழ்த்தினர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ராணுவத்தின் இசி635 ரக ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.தோளில் வைத்து ஏவக்கூடிய சிறிய வகை ஏவுகணையைக் கொண்டு அந்த ஹெலிகாப்டரை பயங்கரவாதிகள் தாக்கினர் என்றார் அவர்.

அந்த நாட்டின் பெய்ஜி நகருக்கு அருகில் பறந்து சென்ற இரு ராணுவ ஹெலிகாப்டர்களை பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் சுட்டு வீழ்த்தினர். இராக்கிலும், சிரியாவிலும் கணிசமான பகுதிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.அந்தப் பகுதிகளிலுள்ள ராணுவ நிலைகளில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கியிருக்கலாம் என ராணுவ நிபுணர்கள் அச்சம் எழுப்பியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit