கண்ணிவெடிகளை அகற்றிய 12 பேர் சுட்டுக் கொலை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள வாஷிர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இது தொடர்பாக மாவட்ட காவல் துறையின் செய்தித்தொடர்பாளர் பரீத் அகமது உபைத் கூறியது:

ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் நெடுஞ்சாலைகளில் பொருத்திய கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடைபெற்றது. இதில் 12 பேர் உயிரிழந்தனர் என்று கூறினார்.

கண்ணிவெடிகளைப் பரவலாகப் பயன்படுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் பல இடங்களில் அவற்றைப் பொருத்தியுள்ளனர்.

தனியார் உதவியுடன், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கண்ணிவெடிகளை அகற்றி வருகின்றனர்.

கண்ணிவெடிகளை அகற்றும் பணியாளர்கள் மீது தலிபான்கள் தாக்கி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் லோகர் மாகாணத்தில் பொருத்தியிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பதின்மூன்று ஆண்டு காலம் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நேட்டோ படையினர் இவ்வாண்டு இறுதியில் அந்நாட்டை விட்டு வெளியேற உள்ள நிலையில், தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.

உச்ச நீதிமன்ற அதிகாரி சுட்டுக் கொலை: ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றச் செயலகத்தின் தலைமை அதிகாரி அதிக்குல்லா ரவூஃபி சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

காலையில் அவர் வீட்டிலிருந்து உச்ச நீதிமன்ற அலுவலகத்துக்கு காரில் புறப்படும்போது, அந்த இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த பயங்கரவாதிகள், அவரை நோக்கி சுட்டனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். தலிபான் பயங்கரவாதிகள் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றனர்.

அமெரிக்க வீரர்கள் பலி: காபூல் அருகே பக்ராம் போர் விமான தளத்தைச் சேர்ந்த வாகனங்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த மாதத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்ட முதல் சம்பவம் இதுதான்.

இந்த ஆண்டில், இது போன்ற தாக்குதல்களில் சர்வதேசப் படையைச் சேர்ந்த 65 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 50 பேர் அமெரிக்க வீரர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*