சச்சினுக்கே இது நடந்திருக்கு..கோஹ்லிக்கு என்ன? முன்னாள் இந்திய வீரர்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sachin

கிரிக்கெட் கடவுளாக கருதப்படும் சச்சினே சில நேரங்களில் வீழ்ந்தது உண்டு கோஹ்லியும் ஒரு சாதரண வீரர் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது பத்தாவது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

பெங்களூரு அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி அந்த அளவிற்கு சாதிக்கவில்லை. இதனால் அவர் எதிர்வரும் சாம்பியன் டிராபி தொடரில் அசத்துவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கோஹ்லி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில், கிரிக்கெட் கடவுளாக கருதப்படும் சச்சினுக்கே, இப்படி நடந்தது உண்டு. கோஹ்லியும் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் தான்.

அதனால் அவர் சில நேரங்களில் வீழ்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit