தலாய்லாமாவுடன் சந்திப்பு நிகழ்த்த மறுத்தார் போப் ஃபிரான்சிஸ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சீனாவிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயங்களுடனான உறவினைப் பாதிக்கும் என்ற அச்சத்தினால் பாப்பரசர் ஃபிரான்சிஸ் தீபேத் பௌத்த ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா ஐச் சந்திக்கும் ஏற்பாட்டினை மறுத்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்துக்கு வத்திக்கான் பேச்சாளர் கூறுகையில், தலாய் லாமாவைச் சந்திப்பது என்பது சீனாவுடனான உறவைப் பாதிக்கும் என்பதற்கு மிகத் தெளிவான காரணங்கள் இருப்பதால் குறித்த விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாகவும் இந்த சூழ்நிலையை தலாய் லாமா புரிந்து கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

ரோம் நகரில் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்களுடனான ஓர் சந்திப்புக்காக வந்திருந்த திபேத்திய பௌத்தத் துறவி ஒருவர் இத்தாலிய ஊடகம் ஒன்றுக்கு இது குறித்துத் தகவல் அளிக்கையில், தலாய் லாமாவுடன் பாப்பரசர் சந்திப்பு ஒன்று நிகழ்த்துவது தொடர்பில் வத்திக்கான் தேவாலய நிர்வாகத்தைத் தான் அணுகியதாகவும் ஆனால் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது சில கருத்து வேறுபாடுகளுக்கு வழி வகுக்கலாம் என்பதால் அவர்கள் அதை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இவ்விடயம் தொடர்பில் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத வத்திக்கான் அதிகாரி ஒருவர் தகவல் அளிக்கையில், இம்முடிவு அச்சத்தின் காரணமாக எடுக்கப் படவில்லை என்றும் ஏற்கனவே துன்பத்தை அனுபவித்திருந்த சீனாவின் சிறுபான்மைக் கிறித்தவர்களுக்கு மேலும் துன்பத்தைத் தராமல் இருப்பதற்காகவே எடுக்கப் பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரோமில் தங்கியிருக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசினை வெற்றி பெற்றவர்களையும் போப் சந்திக்க மாட்டார் எனவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. சீனாவில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் இரு சமூகங்களாகப் பிளவு பட்டுள்ளன. இதில் தேசபக்த தேவாலய சங்கமானது சீனாவின் ஆளும் கம்யூனிசக் கட்சிக்குக் கட்டுப்பட்டுள்ளதுடன் அவர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றது. அடுத்த வகை தேவாலயங்கள் இதற்கு முரணாகவும் சீன சட்டத்துக்கும் புறம்பாகவும் தலைமறைவாக வத்திக்கானின் பாப்பரசருக்குக் கட்டுப் பட்டே செயற்பட்டு வருகின்றன. 1949 ஆம் ஆண்டு சீனாவின் ஆளும் தரப்பாக கம்யூனிசக் கட்சி பொறுப்பேற்றதில் இருந்து பீஜிங்குடன் வத்திக்கான் உத்தியோக பூர்வமான உறவினை இதுவரை ஏற்படுத்தவில்லை. ஆனால் சீனாவுடன் உறவினை அபிவிருத்தி செய்ய முயன்று வருகின்றது.

இதேவேளை ஆகஸ்ட் மாதம் சீனாவின் வான் பரப்பைக் கடந்து தென் கொரியாவுக்குச் சென்ற முதல் பாப்பரசர் ஃபிரான்சிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு முன்னால் பாப்பரசர் பெனெடிக்ட் XVI இனை தலாய் லாமா சந்தித்திருந்தார். மேலும் ஆக்டோபரில் தென் ஆப்பிரிக்காவில் ரோம் பாதிரியார்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றிருந்தது. ஆயினும் இதில் பங்கேற்கத் தலாய் லாமாவுக்கு தென்னாபிரிக்கா விசா மறுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*