மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழரின் முடிவு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கனேடிய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதை விட இலங்கைக்கு நாடு கடத்துவதை விரும்புவதாக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையர் தன்னை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைகளுக்கு பின்னால் இருப்பதை விட இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை ஏற்பதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தின் முன் அவரது மூன்றாவது தடுப்பு தொடர்பான மறு ஆய்வின் போது, தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யப்பட்ட மேன்முறையீட்டினை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் விரைவாக நாடு கடத்தப்படுவதனை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

31 வயதான தனபாலசிங்கம், அவரது மனைவி அனுஜா பாஸ்கரனை கொலை செய்த சம்பவம் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது.

அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்த போது ஜுரிக்கு முன்னால் கொண்டு வருவதற்கு நீண்ட காலம் சென்றுள்ளது.

சிவலோகநாதன் தனபாலசிங்கம் விசாரணைகள் இன்றி 56 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கிட்டத்தட்ட ஐந்து வருட சிறைத்தண்டனைக்குப் பிறகு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி தனுபாலசிங்கம் விடுதலை செய்யப்பட்ட போதிலும் உடனடியாக கனடா எல்லைப்பகுதி சேவையினால் அவர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டார்.

குடிவரவு மற்றும் அகதிகள் சபை அங்கத்தவர்கள் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின் போது, சிவலோகநாதன் தனபாலசிங்கம், விமானம் மற்றும் கனேடிய சமூகத்திற்கு ஆபத்தானவர் என அறிவிக்கப்பட்டது.

நாடு கடத்தலுக்கு இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் விமானத்திற்கு ஆபத்தானவர் எனவும், கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதால் கனேடிய சமூகத்திற்கு ஆபத்தானவர் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதனால் அவரது சகோதரர் மற்றும் மைத்துனரின் கவனிப்பின் கீழ் அவரை விடுவிக்க முடியாது என அறிவிக்கப்பட்டது.

தனபாலசிங்கம் எந்தவிதமான தவறையும் செய்யவில்லை என அவர்கள் இருவரும் சாட்சியம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*