தென் சீனக் கடலில் கடற்பரப்பு ஆக்கிரமிப்பு பற்றிய அமெரிக்க அறிக்கையை நிராகரித்தது சீனா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய கடற்பரப்புக்களை ஆக்கிரமித்தது குறித்து சமீபத்தில் அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் வாஷிங்டன் நிர்வாகத்தின் நடுநிலைமையை குறித்த அறிக்கை இல்லாமல் செய்ந்து விட்டதாகவும் பீஜிங் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தென் சீனக் கடலில் சிறிய தீவுகள் மற்றும் வளம் மிக்கக் கடற்பரப்புக்களை ஆக்கிரமிப்பது தொடர்பில் பீஜிங் மற்றும் வாஷிங்டன் ஆகிய இரு நிர்வாகங்களுமே அறிக்கை வெளியிட்டிருந்தன.

அமெரிக்க மாநிலத் திணைக்களம் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஐ.நா உடன் சீனா கைச்சாத்திட்டிருந்த சர்வதேச சட்டத்துக்குப் புறம்பாக புவியியல் மற்றும் வரலாற்று கண்ணோட்டத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி அலசப் பட்டிருந்தது. இதற்கு சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சு காட்டமாக பதிலுரைத்திருந்தது. சீன வெளியுறவுத் துறை பேச்சாளரான ஹொங் லெய் கூறுகையில், ‘தென் சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாடும் பகுதிகள் சீனாவின் வரலாறு மற்றும் பண்டைய அரசுகளின் ஆட்சியில் சீனாவுக்கு சொந்தமாக இருந்தவையே!’ என்றுள்ளார். இந்நிலையில் தென் சீனக் கடலின் இதே பரப்பில் அமைந்துள்ள சில பகுதிகளை வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் ஐ.நா இன் UNCLOS என்ற கடல் சட்டப் பிரகாரம் தென் சீனக் கடல் சர்ச்சை தொடர்பில் சர்வதேசத்தின் நடுவர் மன்றத்துக்கு பிலிப்பைன்ஸ் விண்ணப்பித்துள்ளது. இதில் சீனா டிசம்பர் 15 இற்குள் தனது நிலைப்பாட்டைப் பாதுகாக்க அவகாசம் உள்ளது என்ற போதும் இவ்விசாரணையில் பங்கேற்கும் திட்டம் இல்லை என பீஜிங் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தென் சீனக் கடல் உரிமைப் பிரச்சினையில் சர்வதேச நடுவர் மன்றம் தலையிட முன்னர் சம்பந்தப் பட்ட நாடுகள் முதலில் இணைந்து ஓர் இணக்கத்தை எட்டுவது தான் உசிதம்!’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பல நாடுகள் போட்டியிட்டு சொந்தம் கொண்டாடி வரும் தென் சீனக் கடல் பரப்பு உலகின் மிக முக்கியமான அதே நேரம் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பகுதிகளில் ஒன்றாகும். மேலும் இப்பகுதி மிகுந்த கணிய வளமும் கணிம எண்ணெய் மற்றும் எரிவாயு வளமும் மிக்கது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*