நடித்தது போதுமாம்! குடித்தனம் வேண்டுமாம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சைப் அலிகானுடன் நடித்த ‘ஹேப்பி எண்டிங்’ படத்தின் ரிசல்ட்டால் ஹேப்பியாக இருக்கிறார் இலியானா. இதற்கு இடையே தனது இங்கிலீஷ் காதலையும் பொத்திப் பொத்தி வளர்த்து வருகிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ நி டோன் என்பவரைத்தான் லவ்விக்கொண்டு திரிகிறார் இலியானா. இருவரும் சேர்ந்து டேட்டிங்கில் படு பிசியாக இருக்கிறார்கள். இது பற்றிக் கேட்டால் மட்டும் இலியானா கோபப்பட்டு முகம் சிவக்கிறார். ‘இது எனது பர்சனல் மேட¢டர்’ என கொதிக்கிறார்.

தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்த பிறகு தெலுங்குப் பக்கம் சென்றார் இலியானா. அங்கு டோலிவுட் ஹீரோக்கள் இவரை தங்கள் காதல் வலையில் வீழ்த்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆனாலும் கிசுகிசுக்களிலிருந்து இவர் தப்பவில்லை. சித்தார்த் முதல் நிதின் வரை எல்லா ஹீரோக்களுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.

பாலிவுட் சென்ற பிறகு கிசுகிசு அலை ஓய்ந்திருந்தது. அங்கு பாலிவுட் ஹீரோ யாரையாவது காதலிக்கிறாரா என வழக்கம்போல் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு மீடியா மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென ஆண்ட்ரூவுடன் சேர்ந்திருக்கும் படங்களை அவராகவே டுவிட்டரில் போட்டு ரகசிய காதலனை ஊரறியச் செய்தார். இப்போது இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக இந்தி சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியிருக்கிறது. இதை இலி மறுக்கவில்லை.

எல்லாமே அவரது ஃபேமி லிக்கு தெரிந்தே நடக்கிறது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால¢ இலி எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என அவருக்கு நெருங்கியவர்கள் சொல்கிறார்கள். இப்போது இவர்கள் காதல் மலையேறி இருப்பதால் இலியானாவை வைத்து படம் எடுக¢கும் டைரக¢டர்கள்தான் மலைத்துப்போய் நிற்கிறார்கள். காரணம், ஷூட்டிங் ஸ்பாட்டுக¢கு சொன்ன நேரத்துக¢கு இலி வருவதில்லை. லேட்டாகத்தான் வருகிறார். ஆனால் இரவு 8 மணிக¢கு ஷூட்டிங் முடிவதாக இருந்தால் 6 மணிக¢கே ஜகா வாங்கிவிடுகிறார்.

சில சமயங்களில் காதலனுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக¢கு வந்து அங்கு ஆஃப் ஸ்கிரீனிலும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருக¢கிறாராம். இதையெல்லாம் பார்த்து பட யூனிட் தலையில் அடித்துக் கொண்டு திரிகிறது. சீக்கிரமே சினிமா வுக்கு முழுக்குப் போட்டுவிட்டு காதலனுடன் ஆஸ்திரேலியாவிலேயே செட்டிலாக இலியானா திட்டம் போட்டுள்ளாராம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*