பாகுபலி ஜோடி ரியல் ஜோடியாகிறது? திருமண தேதி விரைவில் அறிவிப்பு?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

wed

இயக்குனர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. பாகுபலி படத்திற்காக பிரபாஸ் 5 ஆண்டுகளாக வேறுபடங்களில் நடிக்காமல் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

பாகுபலி படத்தில் பிரபாஸ் நடித்த சமயத்தில் அவருக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என அவரிடம் விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் பிரபாஸ் நடிகை அனுஷ்காவை காதலிப்பதாக தகவல் பரவியது. இதனை இருவரும் மறுத்தனர். பாகுபலி படம் வெளியாகும் வரை திருமணம் இல்லை என இருவரும் வெளிப்படையாக தெரிவித்தனர்.

பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அனுஷ்கா பிரபாஸ்க்கு ரியல் ஜோடியாக வர விரும்புவதாகவும், இது தொடர்பான இரு வீட்டார் பேசியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது வதந்தியா அல்லது உண்மையா என்பது விரைவில் தெரிந்துவிடும்…. இது தொடர்பான கேள்விக்கு இருவரும் பதில் கூற மறுத்தாகவும் தகவல் பரவி வருகிறது…

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit