என் ஈர நெஞ்சிற்குள்!!!

பிறப்பு : - இறப்பு :

நிலவொளிப் பந்தலின் கீழ்
நினைவென்னும் பாய் விரித்தே
சிலிர்த்தெழுந்த உன் நினைவுகளால்
தினம் என் மனம் வாடியே
பின்னிவரும் ஆசைகளை
நிறுத்தி வைக்க முடியாமல்
தனிமையிலே நான் வாடுகிறேன்

என் மனம் நோகாமல்
கேட்டுப் பெற்ற சம்மதம்
உன் விருப்பத்தின் எண்ணமல்லவா
அந்தக் கற்பனைக்காரிருள் கோட்டையில்
உன் ஒருவன் நினைவுகளால்
உருளும் உணர்வுகள்
இந்த பேதையின் எல்லையா

இன்றுவரை
நான் இருக்கும் தனிமைக்குள்
என் ஈர நெஞ்சிற்குள்
நீந்திவரும் உன் கனவுகள்
உன்னையே நினைக்க வைத்து
நெஞ்சை உலர்த்திச் செல்கின்றதே

நெஞ்சுக்குள் கோலமிடும்
குயிலே என்பாய்
கவிதையே உனக்கான
தாலாட்டுகள் நான் பாடுவேன் என்பாய்
பு ங்காற்றே
ஆனந்த எல்லைகள்
நீ எனக்கு காட்டாயோ
என்ற சாகச வார்த்தைகளால்
எம் கடைசி சந்திப்பின்
நெரிசலுக்குள் சிக்கி
என்னை நான் இழந்ததால்
உன்னிடத்தில் வருத்தம் கொண்டேன்

அன்றிலிருந்து நீ
காணாமல் போனபின்
கண்ணீரை பிளந்து பார்க்கும்
காதலைப் புரிந்து கொண்டேன்
கற்பனை விரித்து வைத்து
கண்களில் கனவுகள் சுமந்து
சிற்சில ஏமாற்றத்தால்
சிதைந்து நான் போய்விட்டேன்

மனசுக்குள் மோனத்தைத் தாங்கி
விண்மீனை எண்ணிக்கொண்டே
விடியும்வரை விழித்திருந்து
சாட்சிகள் இல்லாத
ஊமை நெஞ்சமாக
வானப்பாதையில் ஊர்ந்து செல்லும்
மேகங்களைப் பார்க்கிறேன்
சு ரியனும் சந்திரனும்
என்னைப் பார்த்து சிரிக்கின்றன
இன்றோ
திருமணத்திற்கான ஐhதகங்கள்
தாங்கிய தபால்கள்
என்னைப் பெற்றதாயின்
கைகளில் கனக்கின்றன

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit