என்ன தான் யோசித்தாலும் பாகிஸ்தானால் இந்தியாவை பழி தீர்க்க முடியாதாம்!

பிறப்பு : - இறப்பு :

என்னதான் புதுசு புதுசா பாகிஸ்தான் முயற்சித்தாலும், இந்தியாவிற்கு அது பழசுதான். அதனால் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணியால், நிச்சயம் முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டியில் மோதுகின்றன. இதுவரை ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கிண்ணம் அதாவது 50-ஓவர் மற்றும் 20-ஓவர் தொடர்களில், இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்ததே இல்லை.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை இரு அணிகளும் 3 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது.

இதுகுறித்து கங்குலி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணியின் பயிற்சிக்கும், பாகிஸ்தான் அணியின் பயிற்சிக்கும் நூறு மடங்கு வித்தியாசம் உள்ளது.

அதனால் பாகிஸ்தான் அணியால்,இந்திய அணியை வீழ்த்த முடியவில்லை. இதே முடிவு தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தொடரும்.

என்னதான் புதுசு புதுசா பாகிஸ்தான் முயற்சித்தாலும், இந்தியாவிற்கு அது பழசுதான். அதனால் இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணியால் முடியாது என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit