நடுவானில் பறந்த விமானத்தில் உறங்கிய பைலட் – புகைப்படத்தை வெளியிட்ட பயணி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பொருப்பை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International Airlines விமானத்தில் Amir Akhtar Hashmi என்பவர் முதன்மை விமானியாகவும், Ali Hassan Yazdani துணை விமானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு 304 பயணிகளுடன் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு Pakistan International Airlines விமானம் புறப்பட்டுள்ளது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டுடிருந்த போது பயிற்சி விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு முதன்மை விமானி முதல் வகுப்பிற்கு சென்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்த இருக்கையில் படுத்துக்கொண்ட விமானி, இரண்டு மணி நேரம் தூங்கியுள்ளார். முதன்மை விமானி உறங்கிய போது பயிற்சி விமானி தான் விமானத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், முதன்மை விமானி தூங்கிக்கொண்டு இருந்ததை கண்டு பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்த பிறகு விமான பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்திற்கு பிறகு, விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது.

இவ்விவகாரம் ஆதாரப்பூர்வமாக தற்போது வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவனம் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*