காம்பீர் எனக்கு வேண்டாம்! அடம்பிடிக்கும் விராத் கோஹ்லி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

koli

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் துவக்க வீரராக ரஹானேவை களமிறக்க இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி ஜூன் மாதம் இங்கிலாந்தில் துவங்க உள்ளது. இதில் பங்கேற்கும் எல்லா அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது

இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவருக்கு பதிலாக ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் காம்பீர் அல்லது தவான் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறலாம் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக ரஹானேவை துவக்க வீரராக களமிறக்குவதையே இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் ஐ.பி.எல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் காம்பீர் மற்றும் தவான் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

அதே போல் இளம் வீரர்களுக்கான வாய்ப்பும் இந்திய அணியில் எவ்வாறு வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit