தேசத்துக்காய் உழைத்தோருக்கு ஆதரவாக சுவிஸ் நாட்டில் கையெழுத்தியக்கம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சுவிஸ் தமிழர் அவை «தேசத்துக்காய் உழைத்தோருக்கு உறுதுணையாக நாமிருப்போம்» என்ற அறைகூவலுடன் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் கையெழுத்தியக்கம் ஒன்றினை 04.05.2017 அன்று ஆரம்பித்துள்ளது. இக் கையெழுத்தியக்கம் ஆரம்பிக்கப்பட்ட முதல்நாளன்றே மக்கள் பலர் ஆர்வத்துடன் இதில் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். ஈழத் தமிழர் தேசத்துக்காய் உழைத்தோருக்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் என்றும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதற்கு இக் கையெழுத்தியக்கம் நல்லதொரு எடுத்துக்காட்டாகவும் அமைகிறது.

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் பணியாற்றிய தமிழ்த் தேசியப்பணியாளர்கள் சிலர் மீது அவர்களின் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன்னரான பணிகள் குறித்து சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் முன்னர் பொறுப்புக்களில் இருந்த பணியாளர்கள் சிலருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள இவ் வழக்கு எதிர்வரும் ஆனி மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ் வழக்கு நடைபெறும் காலத்தில் பணியாளர்களுக்கு மக்களின் ஆதரவு வெளிப்படுத்தப்படுவது சாதகமானதொரு விடயமாக இருக்கும் எனும் கருத்து இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்லவிருக்கும் சுவிஸ் சட்ட அறிஞர்களாலும் வெளிப்படுத்தப்பட்ட பின்னணியிலேயே இக் கையெழுத்தியக்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இக் கையெழுத்தியக்கம் பின்வரும் பிரகடனத்துக்கு மக்கள் ஆதரவைக் கோருகிறது.

«இலங்கைத்தீவில் தமது பாரம்பரியத் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் சமத்துவமான உரிமைபெற்ற மக்களாக வாழ்வதற்கும் யுத்த காலங்களில் இப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கான உணவு, இருப்பிடம், சுகாதாரம் போன்ற அடிப்படைத்தேவைகளை வழங்குவதற்காகவும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (WTCC) அமைப்புக்கு நிதி உதவியினை நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே மனமுவந்து வழங்கினேன் என்பதனை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.

உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் (WTCC) பணியாளர்கள் தாயகத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் சுவிஸ்நாட்டில் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தவர்கள் என்ற வகையில் அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எம்மை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது. மக்கள் பணியாளர்களாகிய அவர்கள் குற்றவாளிகள் அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளிப்பது எம்மை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப் பிரகடனத்தில் இணையம் ஊடாகவும் நேரடியாகவும் மக்கள் தமது கையெழுத்துக்களையிட்டு ஆதரவு வழங்கலாம். இப் பிரகடனத்துக்கு ஆதரவு வழங்குவோர் விபரங்கள் சுவிஸ் சட்டத்துக்கமைய பாதுகாப்பாகப் பேணப்படும் எனவும் சுவிஸ் தமிழர் அவை அறிவித்துள்ளது.

இக் கையெழுத்தியக்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்ப் பாடசாலைகள், ஆலயங்கள், வர்த்தக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக, கலை அமைப்புக்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பொது அமைப்புக்களிடமும் சுவிஸ் தமிழர் அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படும் காலப்பகுதியில் நீதிமன்ற வளாகப்பகுதியில் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தோழமை ஒன்றுகூடலை ஆயிரக்கணக்கான மக்களுடன் மேற்கொள்ளும் ஏற்பாடுகளை சுவிஸ் தமிழர் அவையும் பொது அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

கீழே உள்ள இணைப்பில் உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

https://goo.gl/forms/Q9rZiXEQ1YZqzsPr2

நன்றி

Swiss Tamil Association
சுவிஸ் தமிழர் அவை

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*