கண்ணாடியில் போய் உன் முகத்தை பாரு..இப்படியா விளையாடுவது? கோஹ்லியை வசைபாடிய வீரர்

பிறப்பு : - இறப்பு :

பத்தாவது ஐபிஎல் தொடரின் தோல்விகளில் இருந்து விராட் கோஹ்லி, பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.

பத்தாவது ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில், பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.

எட்டக்கூடிய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு, கெயில், கோஹ்லி, டிவிலியர்ஸ் என அனைவரும் வந்த வேகத்தில் பெளலியன் திரும்ப அந்த அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறுகையில்,’ கோஹ்லி முதலில் சென்று தனது முகத்தை தானே கண்ணாடியில் பார்க்க வேண்டும். அவர் தான் இது போன்ற கேவலமான ஷாட்களை விளையாடுகிறாரா என எனக்கு சந்தேகமாக உள்ளது.

முதலில் அவர் தலைவர் என்பதை உணர வேண்டும். தவிர, பார்ம் இல்லாத போது களத்தில் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடி, இழந்த பார்மை மீட்க முதலில் முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit