செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய போகும் நாசா: ஆச்சரிய தகவல்கள்!

பிறப்பு : - இறப்பு :

உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் பல்வேறு கட்ட மாறுதல்களை சந்தித்து வருகிறது.

இதன் உச்சகட்டமாக செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

அரிஜோனா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடப் போகிறார்கள்.

விண்வெளியில் விவசாயம் செய்ய நிச்சயம் சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

செவ்வாயில் மேற்கொள்ளபடும் விவசாயம் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும்.

ஏற்கனவே பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.

இதை இன்னும் கடினமான உலோகங்கள் கொண்டு மெறுகேற்றி அதை விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் அமைக்க திட்டமிடபட்டுள்ளது.

இந்த முழுமையான வடிவமைப்பும், தொழில்நுட்பமும் பூமியில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, செவ்வாயில் எந்தெந்த தாவரங்கள், விதைகள் தேவை என்பது குறித்து ஆராய்சிகள் நடைபெற்று வருகிறது.

விண்வெளியில், தாவரங்களுக்கு சூரிய ஒளிக்குப் பதிலாக சிறப்பு வாய்ந்த விளக்குகளால் ஒளி கொடுக்கப்படும்.

தற்போது இந்தச் சோதனைகள் பூமியில் நடைபெற்று வருகிறது.

ஆனாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் விவசாயத்தில் விளையும் உணவுகளை சாப்பிடும் நடைமுறை சவால்கள் குறித்து பரிசோதனை நடைபெற்று வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit