சாம்பியன் டிராபி தொடருக்கு இந்திய அணியை அறிவியுங்கள்: நிர்வாகிகள் குழு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

cri

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியை உடனே அறிவிக்குமாறு பிசிசிஐ-க்கு நிர்வாகிகள் குழு உத்தரவிட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. வருவாய்ப் பங்கீடு தொடர்பாக பிசிசிஐ-க்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-க்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால், சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலிருந்து வெளியேறுவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வரும் 7-ஆம் திகதி நடைபெற உள்ள சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

அதில் எடுக்கப்படும் முடிவு, இந்திய கிரிக்கெட்டின் நலன்களுக்கு எதிராக இருந்தால், உச்சநீதிமன்றத்தை அணுகத் தயங்க மாட்டோம் என்று நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களின் நலன் எல்லாவற்றையும்விட முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்பதற்கான தயாரிப்புகளை செய்ய அவர்களுக்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் நிர்வாகிகள் குழு கூறியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit