கேட்ச் பிடிக்க பறந்து அந்தரத்தில் மோசமாக மோதிக்கொண்ட ஸ்மித்- ஸ்டோக்ஸ்: வைரல் வீடியோ

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பின் போது புனே அணித்தலைவர் ஸ்மித்தும், ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ஏலம் போன சக அணி வீரர் ஸ்டோக்ஸூம் அந்தரத்தில் மோதிக்கொண்ட காட்சிகள் வைரலாகியுள்ளது.

கொல்கத்தாவில் நடந்த போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழத்தி புனே அணி வெற்றிப்பெற்றது.

போட்டியின் போது நாணய சுழற்சியில் வென்ற புனே அணி பந்து வீச தெரிவு செய்தது.

போட்டியின் போது புனே வீரர் Unadkat வீசிய 18வது ஓவரில் துடுப்பாடிய கொல்கத்தா வீரர் நைல் பந்தை பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.

பவுண்டரி கோட்டிற்கு அருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்து ஸ்மித், ஸ்டோக்ஸ் இருவரும் பந்தை கேட்ச் பிடிக்க ஓடி வந்த அந்தரத்தில் பறக்க, பந்தை பிடித்த ஸ்டோக்ஸ் எதிரே ஓடி வந்த ஸ்மித் மீது பலமாக மோதி இருவரும் பவுண்டரி கோட்டிற்கு வெளியே விழுந்தனர்.

இதில் ஸ்மித் தரையில் பலமாக மோதி சரிந்தார். இதைக்கண்ட ஸ்டோக்ஸ் உடனே உதவிக்கு அழைத்தார். எனினும், உதவியை புறக்கணித்த ஸ்மித் தொடர்ந்து களத்தடுப்பில் ஈடுபட்டார்.

இருவரும் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்காத விதத்தில் அது சிக்சர் என அறிவிக்கப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*