வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை! +1, +44 எனத் தொடங்கும் நம்பர்கள் வந்தால் உஷார்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வளர்ந்து வரும் நவீன உலகத்தில் விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சி மக்களுக்கு எந்தளவுக்கு நன்மைகள் தருகிறதோ, அதே அளவிற்கு தீங்குகளையும் விளைவிக்கிறது.

தற்போதைய காலத்தில் உலக நிகழ்வுகள் அனைத்தும் கையடக்கத்தில் வந்துவிட்டன. ஆன்ட்ராய்டு எனப்படும் ஸ்மார்ட் போன்கள் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு காரணங்களுக்காக ஸ்மார்ட் போனை உபயோகித்து வருகின்றனர். அதில் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டது வாட்ஸ்ஆப், பேஸ்புக்.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் போலியான அக்கவுண்ட்டை உருவாக்குவது அதன் மூலம் தனி மனித உரிமை கெடுப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் என்ன விசேஷம் என்றால், உங்களால் போலி எது, உண்மை எது என கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கும். பெரும்பாலான போலி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கப்படுகின்றன.

உங்களுக்கு திடீரென்று ஒரு வினோதமாக எண்ணில் இருந்து ஒரு செய்தியை பெற்றால் உஷாராகிக் கொளுங்கள் அது ஒரு போலி அக்கவுண்ட் ஆக இருக்க அதிக வாய்ப்புண்டு.

மேலும், உங்களுக்கு +1 என்று தொடங்கும் ஒரு எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் வந்தால் அது ஒரு விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) ஆப் மூலம் உருவாக்கப்பட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

அதே மாதிரி +44 எனத்தொடங்கும் ஒரு தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வந்தால் அதுவும் போலியானதாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

இம்மாதிரியான போலியான எண்களில் இருந்து வரும் மெசேஜ்கள் வாட்ஸ்ஆப் பிளாக், வாட்ஸ்ஆப் கோல்ட் போன்ற போலியான வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ் கிடைக்கும்.

உங்களது தகவல்கள் திருடப்படும் அல்லது உங்கள் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பரிசு கிடைத்துள்ளது. இந்த வவுச்சரை கிளிக் செய்யுங்கள் என்ற ஏமாற்று செய்திகள் கிடைக்கும்.

அவைகள் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அல்லது உங்களது வாட்ஸ்ஆப் வேலை செய்யாது அல்லது இனி வாட்ஸ்ஆப் பயன்படுத்த நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற பீதி கிளப்பும் செய்திகள் பெற்று அதன் மூலமும் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*