இன்று பாஸ்வேர்ட் தினம்: பாஸ்வேர்டுகளை திருடு போகாமல் பாதுகாப்பது எப்படி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகளவில் பாஸ்வேர்டு உபயோகம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் உலகப் பாஸ்வேர்டு தினம் மே மாதத்தின் முதல் வியாழன் அன்று கடைப்பிடிக்கபடுகிறது.

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள், இமெயில், இணைய வணிகம் போன்ற இணையம் சம்மந்தமான எல்லா விடயங்களுக்குமே பாஸ்வேர்ட் என்பது முக்கியமான ஒன்றாகும்.

இன்று உலகளவில் பாஸ்வேர்ட் திருட்டு, இணைய ஹேக்கிங் போன்ற விடயங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

இதன் மூலம் நமது அந்தரங்க விடயங்கள், பதிவுகள், ஆவணங்கள் போன்றவைகள் திருடப்படுகிறது.

நமது பாஸ்வேர்டை பாதுகாப்பது எப்படி?

பலர் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் பெயர்கள், செல்ல பிராணிகளின் பெயர்களை பாஸ்வேர்டாக வைத்து கொள்கிறார்கள்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பகிர்வுகள் வாயிலாக உலகில் எவர் வேண்டுமானாலும் இந்தத் தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.

அதே போல கடினமான பாஸ்வேர்ட்களை வைத்து கொள்கிறவர்கள், அதை மறந்து விட்டு திணறும் விடயங்களும் அதிகம் அரங்கேறுகிறது.

தனக்குச் சுலபமானதாக பிறர் யூகிக்க கடினமானதாக இருப்பதே நல்ல பாஸ்வேர்டுக்கான இலக்கணம் ஆகும்.

பாஸ்வேர்ட் மாற்றம் தேவை

பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டியது அவசியமாகும்.

மேலும், இமெயில், பேஸ்புக், வங்கி உபயோகம் என அனைத்துக்கும் ஒரே பாஸ்வேர்டுகளை உபயோகிக்கக் கூடாது.

அதிகப்படியான பாஸ்வேர்டுகளை உபயோகிப்பவர்கள் குழப்பங்களைத் தவிர்க்க இணையத்தில் கிடைக்கும் பாஸ்வேர்ட் மேனேஜர்கள் உதவியை நாடலாம்.

இணைய திருட்டுகளை பற்றி படிக்க எத்திக்கல் ஹேக்கிங் என்ற தனி பாட பிரிவு கூட உள்ளது.

அடையாள திருட்டுகளை தவிர்க்க

  • கணினி, ஸ்மார்ட் போன்களில் உரிய ஆண்டி வைரஸ் பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வேண்டும்.
  • சமூகவலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர கூடாது.
  • சந்தேகத்துக்கு இடமான இணைய தளங்கள், இ-மெயில்கள், வங்கி பெயரிலான அழைப்புகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
  • பொது இடங்களில் இருக்கும் வை-பை இணையத்தின் மூலம் கூட தகவல்களை திருட முடியும் எனபதால் அதை உபயோகபடுத்துவதை தவிர்க்கலாம்.

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*