தல ஸ்டைலில் திருப்பத்தை ஏற்படுத்திய திருப்பதி: ஹாட்ரிக் வெற்றியில் புனே!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கொல்கத்தா அணிக்கு எதிரான 41வது லீக் போட்டியில் புனே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

10வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. இதன் 41வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிக்கும் இடையேயான மோதல் கொல்கத்தாவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, புனேவின் உனத் கட் வீசிய முதல் 2 ஓவரை எதிர்கொள்ள திணறியது.

உனத்கட் பந்தில் சுனில் நரேன் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஏமாற்றினார். தடுமாறி விளையாடிய கம்பிர் 24, ஷெல்டன் ஜாக்சன் 10 ஓட்டங்கள், மணிஷ் பாண்டே 37, யூசப் பதான் 4 ஓட்டங்கள் என எடுத்து அவுட்டாகினர்.

பின்னர் வந்த கிராண்ட் ஹோமி 19 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி அடித்து 36 ஓட்டங்களும், சூர்ய குமார் யாதவ் 16 பந்தில் 2சிக்ஸ், 2 பவுண்டரி விளாசி 30 ஓட்டங்களும் குவித்தனர்.

பின்வரிசை வீரர்கள் கிறிஸ் வோக்ஸ் 1, கூல்டர் நைல் 6, உமேஷ் யாதவ் 2 ஓட்டங்கள் எடுத்தனர்.

புனேவின் உனத்கட் 4 ஓவரில் 28 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாசிங்டன் சுந்தர் 2 ஓவரில் 18 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் சாய்த்தார். ஸ்டோக்ஸ், தாகிர், கிறிஸ்டியன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 156 ஓட்டங்களை விரட்டிய புனே அணிக்கு திருப்பதி தக்க தரிசனம் கொடுத்தார். தொடர்ந்து சிக்ஸ், பவுண்டரி என்று வாணவேடிக்கை காண்பித்த அவர் 93 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரகானே (11), ஸ்மித் (9), டோனி (5) என்று வெளியேற புனே அணி 19.2வது ஓவரில் 6 விக்கெட் மட்டும் இழந்து 158 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த புனே அணி தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் 61 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*