வலைத்தளங்களில் ஆபாச படம் பார்ப்பவரா! அப்படியானால் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும்!

பிறப்பு : - இறப்பு :

இந்தியாவில் நவீன அறிவியலில் வளர்ச்சி முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றாலும், ஒரு பக்கம் மிகவும் மோசமான பாதையை நோக்கி இளைஞர்களை கொண்டு செல்கிறது.

ஆபாச படங்களை அதிகமாக பார்க்கும் டாப்&10 உலக நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இது வளர்ந்து வரும் நமது நாட்டிற்கு மிகப்பெரிய தலைகுணிவை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

வலைத்தளங்களில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அப்படி நீங்கள் ஆபாச படங்களை பார்க்கும் உங்கள் பேஸ்புக் லாக் அவுட் செய்து விடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் லாக்இன்னில் இருந்தால் நீங்கள் டிராக் செய்யப்படுவீர்கள். மேலும் உங்கள் பேஸ்புக் ப்ளக்டுஇன் பட்டன், லைக் பட்டன், ஷேர் பட்டன் போன்றவற்றில் இருந்து கொண்டு ஆபாச வலைத்தளத்தை பார்த்தால் உங்கள் நடவடிக்கை கண்காணிக்கப்படும்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் இப்போது மாறிவிட்டது. விளம்பரங்கள் மூலம் மக்களின் சமூக விஷயங்கள் கண்காணிக்கப்படாது, சேகரிக்கப்படும் தகவல்கள் 90 நாட்களில் அழிக்கப்படும், பணத்திற்காக விற்கப்பட மாட்டாது போன்ற உறுதிமொழிகள் எல்லாம் காற்றில் பறந்துவிட்டது.

தற்போது உங்களை டிராக் செய்வது மட்டுமின்றி, நீங்கள் எந்த வலைத்தளத்தில் உள்ளீர்கள், என்ன பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகிறது.

நீங்கள் பார்க்கும் ஆபாச வலைத்தளங்களின் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்ல இன்டர்நெட்டில் நீங்கள் பார்க்கும் அனைத்து ஆப்ஸ்களின் மூலமும் உங்களுக்கே தெரியாமல் உங்களது தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit