முத்தத்தில் என்ன தப்பு இருக்கு? கேட்கிறார் பிந்து மாதவி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சில்க் ஸ்மிதாவின் சாயல், வசீகர கண்களால் ‘ஜூனியர் சில்க்’ என்று இண்டஸ்ட்ரியில் செல்லமாக அழைக்கப்படுகிற பிந்து மாதவியின் கையில் இப்போது 4 படங்கள். ‘கலக்குற மாப்ளே’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘சவாலே சமாளி’, பாண்டிராஜ் படம் என ரவுண்ட் கட்டி அடித்துக் கொண்டு இருக்கிறார்.

žகாமெடி படத்தில் தொடர்ச்சியாக நடிக்கிறீர்களே?

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, இப்போ நடிக்கிற ‘கலக்குற மாப்ளே’, ‘சவாலே சமாளி’ இவைதான் காமெடி படங்கள். ஆனாலும் இந்தப் படங்களில் எனது கேரக்டர் சீரியசாகத்தான் இருக்கும். ‘வெப்பம்’, ‘கழுகு’ எல்லாம் சீரியசான படங்கள்தான். இந்த இரண்டு படங்கள்லயும் என் நடிப்பை நிறைய பேர் பாராட்டியிருக்காங்க.

ž‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துல கெஸ்ட் ரோல்ல நடிச்சீங்களே..?

அது கெஸ்ட் ரோல் இல்ல. அதுவும் ஒரு கேரக்டர்தான். ஹீரோவோட லைஃபுல வந்துட்டு போற ஒரு பொண்ணு. படத்துல என் போர்ஷன் செமையா இருந்துச்சுன்னு சொன்னாங்களே… அதோட தெலுங்கு ரீமேக்ல என்னோட கேரக்டர்ல சன்னி லியோன் நடிச்சாங்க. இந்தியில நடிக்க பெரிய போட்டியே இருக்காம். அந்த கேரக்டர் அவ்வளவு வெயிட்.

ž‘ஜூனியர் சில்க்’னு சொல்றதை ரசிக்கிறீங்களா?

நான் ரசிக்கிறது இருக்கட்டும், என்னை மற்றவர்கள் அப்படி ரசிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நான் சில்கின் படங்கள் நிறைய பார்த்திருக்கேன். அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரோடு என்னை ஒப்பிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபனை யும் இல்லை.

ž‘வசந்தகுமாரன்’ டிராப் ஆனதுல வருத்தம்தானே?

டிராப் ஆனதா நான் நினைக்கல. நல்லதே நடக்கும்னு நம்புவோம்.

žநடிப்பில் பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து
படிக்கிறீங்களே..?

பி.டெக் முடிச்சிருக்கேன். எம்.டெக் படிக்கணுங்றது என்னோட ஆசை. ஆனால், அதுக்கான நேரம் இப்போது வாய்க்கவில்லை. ஆனால், கண்டிப்பா வெளிநாட்டில் என் படிப்பை தொடர்வேன். ஒரு வேளை சினிமாவிலிருந்து விலகினால் என் படிப்புக்கான வேலையை செய்வேன்.

žஃபேஸ்புக், டுவிட்டர், பார்ட்டி ஃபங்கஷனில் ரொம்ப மிஸ் ஆகுறீங்களே?

ஒண்ணு தெரியுமா? நான் செல்போன்கூட அதிகம் யூஸ் பண்றதில்ல. மிக அத்தியாவசியமான தேவைக்கு மட்டுமே செல்போனை கையில் எடுப்பேன். எப்போதும் அதை கையில் வைத்து நோண்டிக்கொண்டே இருப்பதில்லை. சென்னையில் நண்பர்கள் குறைவு. அதனால் என் வேலை உண்டு, விட்டால் வீடு உண்டு என்று இருந்து விடுகிறேன்.

žஉங்களுக்கு பாய் ஃபிரண்டே கிடையாதா?

இந்தக் காலத்து பொண்ணுங்க பாய் ஃபிரண்ட் இல்லாம இருப்பாங்களா? எனக்கும் இருக்காங்க. ஆனால், நீங்க கேட்குற அர்த்தத்தில் இல்லை.
ஃபிரண்டுன்னா ஃபிரண்டு மட்டும்தான்.

žவளரும் ஹீரோக்களுடன் மட்டும் நடிக்கிறீர்களே… விஜய், அஜீத்கூட நடிக்க ஆசையில்லையா?

நானும் வளரும் நடிகைதானே. அதனால் அவர்களுடன் நடிப்பது ஒன்றும் தவறில்லை. அஜீத், விஜய் கூட நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. சினிமாலேருந்து போறதுக்குள்ள அஜீத் கூட நடிச்சிடணுங்றதுதான் என்னோட ஆசை. அதுக்கான வாய்ப்பு நெருங்கிக்கிட்டிருக்கு.

žசமீப காலமா முத்தம் பற்றி பெரிய போராட்டமே நடந்து கிட்டிருக்கே. நீங்க முத்தத்தின் பக்கமா, எதிர்பக்கமா?

சின்ன பொண்ணுகிட்ட பெரிய கேள்வி கேட்டு சிக்கல்ல மாட்டிவிட்டுடாதீங்க. முத்தம் கொடுக்கிறதும், கொடுக்காததும் அவரவர் விருப்பம். நான் கொடுக்கிறவங்க சைடுதான். ‘வெப்பம்’ படத்திலேயே லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கேன். கதைக்கு தேவைன்னா கொடுக்க தயாராவும் இருக்கேன். ஆமா உலகத்துல ஆயிரம் பிரச்னை இருக்கிறப்போ, இதுக்கெல்லாமா டைம் வேஸ்ட் பண்ணுவாங்க?!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*