இந்த அழகு..கறுப்பு நிறத்துக்கு மட்டுமே சொந்தம்: வைரலாகும் புகைப்படம்!

பிறப்பு : - இறப்பு :

பேஸ்புக் பக்கத்தில், சில தினங்களுக்கு முன்னர் கறுப்பு நிற மேக்கப்பில் மூன்று பெண்கள் தமிழ்க் கலாசார அடையாளத்துடன் தாவணியில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The Uncanny Truth Teller 2 என்ற பேஸ்புக் பக்கத்தில், கருப்பு நிறம்கொண்டவர்கள் மற்றும் எடை அதிகமாக இருப்பவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுவருகிறது.

அந்த பேஸ்புக் பக்கத்தில், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கறுப்பு நிற மேக்கப்பில் மூன்று பெண்கள் தமிழ்க் கலாசார அடையாளத்துடன் நெத்திச் சுட்டி, வளையல்கள், மூக்குத்தி, பெரிய கம்மல்கள் அணிந்துகொண்டு பட்டுத் தாவணியில் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் படத்துக்கு டேக் லைனாக, The Faces of India they won’t show you’ என்ற வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் புகைப்படம், தற்போது பேஸ்புக்கில் வைரல் ஆகியுள்ளது.

ஆனால் அந்தப் பெண்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தெரியவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit