பிரான்ஸின் கடற்படைக் கப்பல் நாகசாக்கியை சென்றடைந்தது!

பிறப்பு : - இறப்பு :

ஜப்பானின் தெற்கு நகரான நாகசாக்கியை பிரான்ஸின் கடற்படைக் கப்பலான மிஸ்ட்ரால் (Mistral) இன்று சென்றடைந்துள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் இணைந்து நடத்தப்படும் கூட்டு இராணுவ பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டே குறித்த கடற்படைக் கப்பல் நாகசாக்கியை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கடற்படைக் கப்பலை வரவேற்கும் வகையில் ஜப்பானிய சுய பாதுகாப்புப் படையினரால் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டதாகவும் பிரான்ஸ் அதிகாரிகளை வரவேற்கும் வகையில், ஜப்பானிய சிறுவர்கள் யொசாகொய் (Yosakoi) எனும் பாரம்பரிய நடனமாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, பிரான்ஸின் மிஸ்ட்ரால் கடற்படைக் கப்பலின் தலைவர் சிறப்பு உரையாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, பிரான்ஸின் குறித்த கடற்படைக் கப்பல் நாகசாக்கியை சென்றடைவதற்கு ஒரு சில மணித்தியாலங்கள் இருந்த நிலையிலேயே வடகொரியா இன்று ஏவுகணை சோதனை ஒன்றை முன்னெடுத்திருந்தது. எனினும், குறித்த சோதனை தோல்வி கண்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit