இந்த வீரரின் மொத்த சாதனையும் இலங்கை அணிக்கு எதிராக தான்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

lk

பாகிஸ்தான் அணி வீரர் யூனிஸ்கான் டெஸ்ட் போட்டிகளில் 10000 ஓட்டங்கள் குவித்துள்ளதற்கு இலங்கை அணி தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி வீரர் யூனிஸ்கான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வரும் நடப்பு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 23 ஓட்டங்கள் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் குவித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

யூனிஸ்கானின் இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இலங்கை அணி தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ், யூனிஸ்கான் மிக திறமையான வீரர் ஆவார்.

நான் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அவரின் விக்கெட்டை தான் வீழ்த்தினேன்.

கடந்த 2015ல் எங்களுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஜெயிக்க 378 ஓட்டங்களை எடுக்க வேண்டியிருந்தது.

நாங்கள் தான் நிச்சயம் ஜெயிப்போம் என நான் நினைத்திருந்த நேரத்தில், அசுரதனமாக விளையாடிய யூனிஸ்கான் 171 ஓட்டங்கள் குவித்து பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார்.

நான் பார்த்த வரையில், இலங்கைக்கு எதிராக விளையாடிய வீரரின் சிறந்த ஆட்டம் என்றால் யூனிஸ்கான் அந்த போட்டியில் விளையாடியது தான்.

கஷ்டமான சூழ்நிலையிலும் எப்படி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்கு யூனிஸ்கான் ஒரு சிறந்த உதாரணம் என அவர் கூறியுள்ளார்.

யூனிஸ்கான் கடந்த 2000ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

முதல் போட்டியிலேயே சதம் அடித்த அவரின் அதிகபட்ச 313 ஓட்டங்களும் இலங்கை அணிக்கு எதிராக தான் சாத்தியம் ஆனது.

மொத்தம் 116 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள யூனிஸ்கான் இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 29 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதே போல மொத்தம் 2200 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிராக யூனிஸ்கான் குவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit